கும்பமேளாவிற்காக ரூ.5,000 கோடி முதலீடு..ரெயில்வே துறை மத்திய மந்திரி தகவல்!
Rs 5,000 crore investment for Kumbh Mela Railway Minister
இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மகா கும்பமேளாவிற்காக ரெயில்வே துறையில் ரூ.5,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், உத்தரகாண்ட் மாநிலம் அரித்வார், மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ஆகிய 4 ஊர்களில் உள்ள ஆற்றங்கரையில் கும்பமேளா கொண்டாடம் களைகட்ட தொடங்கியுள்ளது.
அதில் மிகவும் புகழ்பெற்றது கும்பமேளாவே பிரயாக்ராஜில் நடைபெறும் . அங்கு கங்கை, யமுனை மற்றும் கண்களுக்கு புலப்படாத சரஸ்வதி ஆறு ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறுவதால் இது சிறப்பு வாய்ந்ததாக இந்து மக்களால் கருதப்படுகிறது.மேலும் 3 நதிகளும் சங்கமிக்கும் இடத்தை திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறார்கள். எனவே கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை இந்துக்கள் மிகவும் புனிதமாக கருதுகிறார்கள் என சொல்லப்படுகிறது.
சிறப்பு வாய்ந்த இத்தகைய மகா கும்பமேளா நிகழ்ச்சிகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதில் உலகின் மிகப்பெரிய விழாவான இந்த மகா கும்பமேளாவில் சாதுக்கள், துறவிகள், பக்தர்கள் என உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 45 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மகா கும்பமேளாவிற்காக ரெயில்வே துறையில் ரூ.5,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "மகா கும்பமேளாவிற்காக கடந்த 3 ஆண்டுகளாக ரெயில்வே துறையில் சுமார் ரூ.5,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் ரெயில்வே நிர்வாகத்தில் ஏற்கனவே இருக்கும் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய கட்டமைப்புகளை உருவாக்கவும் இந்த தொகை செலவிடப்பட்டது என கூறினார் . மேலும் மகா கும்பமேளாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்காக புதிய ரெயில்வே வழித்தடங்கள், புதிய நடைமேடைகள் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கங்கை நதியில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது" என்று மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 98
English Summary
Rs 5,000 crore investment for Kumbh Mela Railway Minister