தேர்தல் கருத்துக்கணிப்பு : பங்குச்சந்தை உச்சம் தொடுமா? நிபுணர்கள் எதிர்பார்ப்பு ! - Seithipunal
Seithipunal



நாடு முழுவதும் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து இறுதிக்கட்ட தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. 

அதில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்கள் வரை வென்று ஆட்சியமைக்கும் என்று பெரும்பாலானோர் கணித்திருந்தனர். இது இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து பங்குச்சந்தை நிபுணர்கள் கூறும்போது, "இந்த பாராளுமன்ற தேர்தலில் முன்பை விட அதிக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. எனவே பாஜகவிற்கு போட்டி கடினமாக இருக்கும் என்றும், காங்கிரஸ் ஆட்சியமைக்கவே வாய்ப்புகள் இருப்பதாகவும் கருதப்பட்டது.  இதனால் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பெரிய குழப்பம் நிலவியது. இது பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது.

ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என்று கூறுகின்றன. எனவே திங்கள் கிழமையான இன்று நிஃப்டி 23,500 புள்ளிகளைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இந்த கருத்துக்கணிப்பிற்கு பிறகு, பாஜக கூட்டணி வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அம்பானி நிறுவனங்கள் மற்றும் அதானி நிறுவனங்களின் பங்குகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன" என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Will The Stock Market Reach Peak Today Experts Expecting


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->