யமஹா புதிய R7 மற்றும் MT-09 மாடல் அறிமுகமானது.! - Seithipunal
Seithipunal


யமஹா மோட்டார் இந்திய நிறுவனம் அதன் புதிய R7 மற்றும் MT-09 மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இதற்கான டீசர் வீடியோ யமஹா இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

R7 மற்றும் MT-09 போன்ற பெரிய பைக் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வது குறித்து யமஹா இந்தியா தலைவர் ஈஷின் சிஹானா இந்த ஆண்டு துவக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது இரு மாடல்களின் டீசரை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.

R7 மாடலில் 689சிசி, ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 73 ஹெச்பி பவர் மற்றும் 67 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

யமஹா MT-09 மாடலில் 890சிசி, இன்லைன் மூன்று சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 119 ஹெச்பி பவர் மற்றும் 93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yamaha New R7 and MT09 Model Launched


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->