குழந்தைகள் ரியாலிட்டி ஷோவில் ஆபாச கேள்வி.. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்.! - Seithipunal
Seithipunal


குழந்தைகள் ரியாலிட்டி ஷோவில் நடுவர்கள் ஆபாச கேள்வி கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்கள் மிகவும் பிரபலமாகி வருகிறது. ஆனால் இந்த ரியாலிட்டி ஷோக்கள் பிரபலமடைய செய்யப்படும் சில விஷயங்கள் முகம் சுளிக்க வைக்கிறது. அதன்படி, ரியாலிட்டி ஷோக்கலில் அதிக அளவில் இரட்டை வசனங்கள் மற்றும் எல்லை மீறிய ஆபாச கேள்வி போன்றவை இடம்பெறுவது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஹிந்தியில் சோனி என்டர்டெயின்மென்ட் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குழந்தைகளுக்கான சூப்பர் டான்சர் சீசன் 3 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி, கீதா கபூர் மற்றும் அனுராக் பாசு ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளிடம் நடுவர்கள் அவர்களது பெற்றோர்கள் குறித்து ஆபாசமாகவும் வெளிப்படையான கேள்விகள் குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அதைத்தொடர்ந்து குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

18 plus questioned to children in reality show


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->