ஷியா முஸ்லிம் பெண்ணின் திருமண வயது 9! ஈராக் இயற்றிய கொடூர சட்டம்!
Iraq Child Marriage law
கடந்த 21 ஆம் தேதி ஈராக் நாடாளுமன்றம் குழந்தை திருமணச் சட்டத்தில் மாற்றம் செய்து, பெண் குழந்தைகளின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இதேபோல் திருமணம், விவாகரத்து உள்ளிட்ட குடும்ப விவகாரங்களில் தீர்மானங்களை மதத் தலைவர்களின் அதிகாரத்தில் கீழ் விடும் வகையிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதில், ஷியா முஸ்லிம் பெண்களுக்கு திருமண வயது 9 ஆகவும், சுன்னி முஸ்லிம்களுக்கு 15 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. கணக்கெடுப்பின் படி, ஈராகில் 28% பெண்கள் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்யப்படுகிறார்கள். நிலைமை இப்படி இருக்க, குழந்தை திருமணங்களை தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளாமல், திருமண வயதை குறைக்கும் சட்டத்தை ஈராக் நாடாளுமன்றம் உருவாக்கி இருப்பது உலக மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதில் கொடுமை என்னவெனில் இந்த சட்டத்தை "நீதியை மேம்படுத்தும் முக்கிய முயற்சி" என்று நாடாளுமன்றத் தலைவர் குறிப்பிட்டு இருபத்துதான்.