"ஓர் அழகான கதை" நடிகர் துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரைப்படம்! இன்று பூஜையுடன் படத்தின் பணிகள் தொடக்கம்! - Seithipunal
Seithipunal


இன்று பூஜையுடன் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய ‘காந்தா’ திரைப்படத்தின் பணிகள்  தொடங்கி உள்ளது. நடிகர் ராணாவும் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற ஆவணத் தொடர் ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’. இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இந்தத் தொடரை இயக்கினார் . 

இந்நிலையில், இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்து உருவாகும் புதிய படத்துக்கு ‘காந்தா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தெலுங்கில் உருவாகும் இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் நடிகர் துல்கரின் வேஃபரர் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளது. 

இந்நிலையில் இன்று பூஜையுடன் இப்படத்தின் பணிகள்  தொடங்கி உள்ளது. இந்த படத்தை குறித்து நடிகர் துல்கர் சல்மான் கூறுகையில், “நடிகர் ராணாவுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது மனித உணர்வுகளின் ஆழத்தைப் படம் பிடித்து காட்டும் ஓர் அழகான கதை” என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A Beautiful Story Actor Dulquer Salmaans Kaantha Movie The work of the film starts today with pooja


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->