நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் அட்லீ, லோகேஷ், நெல்சன் கேமியோ ரோலில்? – மிகப்பெரிய சர்ப்ரைஸ் அப்டேட்!
Atlee Lokesh Nelson in cameo roles in actor Vijay Jananayakan Big surprise update
நடிகர் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், நாளுக்கு நாள் புதிய அப்டேட்டுகளால் ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடிக்கிறது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
மேலும், பிரகாஷ் ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு, டிஜே அருணாச்சலம், பாபி தியோல் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் இணைந்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் பணியாற்ற, KVN நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தை பற்றிய மிகப்பெரிய சர்ப்ரைஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குனர்கள் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் ஆகியோர் ‘ஜனநாயகன்’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தில் இந்த மூவரும் பத்திரிக்கை நிருபர்களாக வருகிறார்கள். விஜய்யிடம் கேள்வி எழுப்பும் முக்கியமான உரையாடல் காட்சி ஒன்று இதில் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
அட்லீ, லோகேஷ், நெல்சன் – மூவருமே நடிகர் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர்கள். விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ என்பதால், இவரும் ஒரு சிறப்பான பங்காற்ற விரும்பியுள்ளனர். இதற்காக அவர்கள் மூவரும் ஏதேனும் சம்பளம் வாங்காமல், விஜய்க்காக மட்டுமே இந்த கேமியோ ரோலில் நடித்து இருக்கிறார்களாம்.
‘ஜனநாயகன்’ விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இதற்குப் பிறகு அவர் அரசியலுக்கு முழு நேரம் செல்ல உள்ளார். தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை அடுத்த 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயார்ப்படுத்த தீவிர முயற்சியில் இருக்கிறார்.
2025 பொங்கல் திருவிழாவுக்கு வெளியீடு என திட்டமிடப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ படம், ஒரு மரண மாஸ் அரசியல் திரில்லர் ஆக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. விஜய் – அட்லீ – லோகேஷ் – நெல்சன் இணையும் கேமியோ காட்சி படத்திற்கு கூடுதல் வரவேற்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Atlee Lokesh Nelson in cameo roles in actor Vijay Jananayakan Big surprise update