தனிப்பட்ட முறையில் எனக்கு பெரிய இழப்பு!...டெல்லி கணேஷ் மறைவு குறித்து வெற்றி மாறன் உருக்கம்!
A big loss for me personally vetri maran melts over the death of delhi ganesh
தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் டெல்லி கணேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள டெல்லி கணேஷ், நகைச்சுவை, குணச்சித்திரம் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் திறம்பட நடித்தவர் ஆவார்.
இந்த நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் இன்று காலமானார். அவரது உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு இயக்குனர் வெற்றி மாறன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் உதவி இயக்குராக பணியாற்றிய போது நிறைய படங்களில் டெல்லி கணேஷ் பங்கெடுத்தார் என்றும், நான் புதியதாக வேலைக்கு சேரந்த போது எனக்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் இருந்தார் என்று கூறினார்.
மேலும், டெல்லி கணேஷ் மறைவு தனிப்பட்ட முறையிலும், தமிழ் சினிமாவிற்கும் டெல்லி கணேஷ் மறைவு பெரிய இழப்பு என்று தெரிவித்தார்.
English Summary
A big loss for me personally vetri maran melts over the death of delhi ganesh