சென்னையில் மாமுல் தர மறுத்த பெண்! வெட்டி படுகொலை செய்த ரவுடி! பெரும் அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே மாமுல் கேட்டு தராத பெண் வியாபாரியை ரவுடி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சரியில்லை, காவல் துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், ரவுடியால் பெண் வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவொற்றியூர் சன்னதி தெருவில் பழக்கடை நடத்திவரும் கௌரியிடம் பர்மா சேகர் என்ற ரவுடி மாமுல் கேட்டு மிரட்டையுள்ளார்.

கௌரி மாமுல் கொடுக்க மறுக்கவே ஆத்திரமடைந்த ரவுடி பர்மா சேகர் கௌரியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார்.

கொலையை தடுக்கும் முயன்ற கௌரியின் கணவர் மாரியையும் பர்மா சேகர் கத்தியால் குத்தியுள்ளார். 

அப்போது அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் பர்மா சேகரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், கௌரியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், படுகாயம் அடைந்த மாரியை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai rowdy attack women


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->