டி.என்.பி.எஸ்.சி.தேர்வாளர்களுக்கு முக்கிய செய்தி; ஓ.எம்.ஆர் விடைத்தாளில் அதிரடி மாற்றம்..!
New change in OMR answer sheet
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஓ.எம்.ஆர் விடைத்தாளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான்லூயிஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதிய ஓ.எம்.ஆர். விடைத்தாளின் மாதிரி படிவம், www.tnpsc.gov.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் 04 இலக்க வினாத் தொகுப்பு எண்ணை அதற்குரிய வட்டங்களில் கருமை நிற பந்துமுனை பேனாவை பயன்படுத்தி கருமையாக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், ஓ.எம்.ஆர் விடைத்தாளின் பக்கம் 01, பகுதி-02 இல் தேர்வர்கள் உறுதிமொழி அளித்து கையொப்பமிட வேண்டும். மேலும் தேர்வாணையத்தால் நடத்தப்பட இருக்கும் இனி வரும் அனைத்து ஓ.எம்.ஆர். முறை தேர்வுகளிலும், பங்கேற்க உள்ள தேர்வர்கள், புதிய மாதிரி ஓ.எம்.ஆர். விடைத்தாளினை நன்கு பார்த்து அறிந்துக் கொண்டு தேர்வு எழுத வேண்டும். என்று அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
New change in OMR answer sheet