இந்த காரணத்திற்காகவே ஆரி ஜெயிக்கணும்., அன்பு கேங் எல்லாம் வேஸ்ட்.! அனல் பறக்கும் விவாதங்கள்.!
aari may title winner
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் நான்காவது நிகழ்ச்சி, 70 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சமூக வலைதளங்களில் அதிகப்படியான ஆதரவு குவிந்து வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து இன்றுவரை தனித்துவமாக அவர் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.
மேலும், ரசிகர்கள் பலரும் விசுவாசம், கண்ணியம், நேர்மை போன்றவற்றை ஆரியிடமிருந்துதான் மற்றவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று விமர்சித்து வருகின்றனர். அத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அன்பு கேங்கெல்லாம் ஜெயித்தால் 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை.

ஆனால் ஆரி வெற்றி பெற்றால் ஏழை எளிய மக்களுக்கு நிச்சயம் உதவி செய்வார் என்று அவருடைய ரசிகர்கள் ஆணித்தரமாக சமூக வலைத்தளங்களில் விவாதம் செய்து வருகின்றனர். முன்னதாக பல்வேறு முயற்சிகளையும், ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகளையும் செய்து இருக்கின்றார் ஆரி.
பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பே அவர் எந்த எதிர்பார்ப்புமின்றி மக்களுக்கு சேவை செய்தார். எனவே, அவர் ஜெயித்தால் நிச்சயம் அவருக்கு கிடைக்கும், பிக்பாஸ் பரிசு தொகையை கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உதவுவார் என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய நிகழ்சியில் பிக் பாஸ் கூட நீங்கள் உங்களுடைய பங்களிப்பை முழுமையாக இந்த வீட்டில் காட்டி உள்ளீர்கள் என்று பாராட்டிய போது, தன்னை அறியாமல் கண் கலங்கியது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆரி டைட்டில் வின்னர் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிக்பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை ஷேர் செய்து வருகின்றனர்.