சூர்யாவின் 'ரெட்ரோ' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு..?
Surya Retro trailer and music release
நடிகர் சூர்யாவின் 44-வது படம் 'ரெட்ரோ'. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாகயுள்ளது. முன்னதாக டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு காட்சி காமிக்ஸ் வடிவில் வெளியாகி வருகின்றன. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படத்திற்கான பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ரெட்ரோ படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் வருகிற 18-ந் தேதி இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இசை வெளியீட்டு விழாவிலேயே டிரெய்லரும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Surya Retro trailer and music release