தமிழ்ப் புத்தாண்டு & தொடர் விடுமுறை! 1,680 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
special bus govt bus
மகாவீர் ஜெயந்தி, வார இறுதி விடுமுறை மற்றும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
புதன்கிழமை (10ம் தேதி) முதல் சனிக்கிழமை வரை மற்றும் அடுத்த திங்கள் (14ம் தேதி) வரை நீண்ட விடுமுறை நாட்கள் வருவதால், பயணிகள் அதிகம் உள்ளதை கண்காணித்து கூடுதல் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு இன்று (புதன்) 190 பஸ்கள், வெள்ளிக்கிழமை 525 மற்றும் சனிக்கிழமை 380 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
அதேபோல், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று 50, வெள்ளிக்கிழமை 100 மற்றும் சனிக்கிழமை 95 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பெங்களூரு, கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற நகரங்களில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. மாதவரம் பஸ் நிலையத்திலிருந்து மட்டும் 3 நாள்களில் மொத்தம் 60 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மொத்தமாக 1680 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. தமிழ்ப்புத்தாண்டன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பும் பயணிகளுக்காகவும் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.