விஷாலுக்கு மனைவியாகும் பிரபல நடிகை? அவரே வெளியிட்ட தகவல்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி ஆக்சன் நடிகராக இருப்பவர்தான் விஷால். இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட திரையிலும் நல்ல மார்க்கெட் கொண்டுள்ளார். இவரது நடிப்பில் அடுத்ததாக லத்தி படம் வெளியாக இருக்கிறது. 

இந்த திரைப்படத்தில் நடிகை சுனேனா விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படமானது போலீஸ் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். தற்போது விஷாலுக்கு 45 வயதாகும் நிலையில் அவர் பிரபல நடிகையான அபிநயாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக இணையதளத்தில் தகவல் வெளியாக ஆரம்பித்துள்ளது. 

முன்னதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் விஷால் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவியது. அதன் பின்னர், தெலுங்கு நடிகை அன்ஷா அல்லா ரெட்டிக்கும் விஷாலுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து அதில் முறிவும் ஏற்பட்டது. 

இத்தகைய சூழலில் இந்த வதந்திக்கு நடிகை அபிநயா தரப்பிலிருந்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மார்க் ஆண்டனி இயக்குகின்ற புதிய படத்தில் விஷாலுக்கு மனைவியாக அபிநயா நடிக்க இருக்கிறார் என்றும், அது குறித்த போட்டோ சூட் இணையத்தில் வைரலாகி வதந்திகளை கிளப்பியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

abinaya about vishal wife rumours


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->