புதுச்சேரிக்கு தேவையான நிதி வருகிறது..எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு முதலமைச்சர் ரங்கசாமி பதில்.!
Necessary funds are coming to Puducherry. Chief Minister Rangasamy responds to Oppositions allegation
மத்திய அரசு தேவையான நிதியை புதுச்சேரிக்கு வழங்கி வருகிறது , பல வகையில் நிதியை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இலவச அரிசி திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது- முதலமைச்சர் ரங்கசாமி தகவல் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார்.தொடர்ந்து சபையின் அடுத்த அலுவலுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சென்றார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் சிவா குறுக்கிட்டு பேசியதாவது:-மத்திய அரசு தொடர்ந்து புதுவையை வஞ்சித்து வருகிறது என கூறினார்.
இதையடுத்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு முதலமைச்சர் ரங்கசாமி பதில் கூறும்போது:கடந்த ஆட்சியில் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்க முடியவில்லை, திட்டங்கள் செயல்படுத்தவில்லை என எதிர்கட்சிகள் தெரிவிக்க வேண்டும், மத்திய அரசு உதவியுடன் அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது.மத்திய அரசு தேவையான நிதியை புதுச்சேரிக்கு வழங்கி வருகிறது , பல வகையில் நிதியை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இலவச அரிசி திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது- முதலமைச்சர் ரங்கசாமி தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து பேரவை கூட்டத்தை காலவரையின்றி ஒத்தி வைத்து அறிவித்தார் சபாநாயகர் செல்வம்.சட்டப்பேரவை சபாநாயகர் மீது நம்பிக்கை உள்ளது என்ற தீர்மானத்தை முதலமைச்சர் ரங்கசாமி பேவையில் கொண்டு வந்தார், இதனை சபாநாயகர் செல்வம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றினார், இதன் காரணமாக சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது.தொடர்ந்து பேரவை கூட்டத்தை காலவரையின்றி ஒத்தி வைத்தார் சபாநாயகர் செல்வம்.
English Summary
Necessary funds are coming to Puducherry. Chief Minister Rangasamy responds to Oppositions allegation