3 மாணவர்கள் மீது பள்ளி சுவர் இடிந்து விழுந்து விபத்து..புதுச்சேரியில் பரபரப்பு!
School wall collapses on 3 students Sensation in Puducherry!
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே புதுக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் குடிநீர் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்து புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் சபாநாயகர் செல்வம் நேரில் சென்று மாணவர்களை நலம் விசாரித்தார். மேலும் மருத்துவ அதிகாரிகளை அழைத்து விரைந்து உயர்தர சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
புதுகுப்பம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மதில் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களை காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் வைத்தியநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் குலோத்தங்கன் நேரடியாக சென்று உடல் நலம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரித்தார்..
புதுச்சேரி மாநிலம் ,மனவெளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுகுப்பம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியின் மதில் சுவர் விழுந்து மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.பலமுறை புதுகுப்பம் ஊர் மக்களுடைய சார்பாகவும் பெற்றோர்களுடைய சார்பாகவும் புதுகுப்பம் அரசு பள்ளி பழுதடைந்து உள்ளது இதை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்றும்கூறியுள்ளனர்.
மதில்சுவர் ஆபத்தான நிலையில் உள்ளது இதை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்றும் விபத்து ஏற்பட்டால் மாணவர்கள் படுகாயம் அடைவார்கள் என்றுபல்வேறு கோரிக்கையை அந்த தொகுதி உடைய சட்டமன்ற உறுப்பினர் இடத்திலே தெரிவித்தும் கூட மாணவர்கள் உடைய உயிரிலே விளையாடக்கூடிய ஒரு அபாயகரமான இந்த அரசுடைய செயல் கடுமையான கண்டனத்துக்குரியது என கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளிகளையும் அரசு பள்ளி கல்வித்துறை ஆய்வு செய்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பழுதடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகள் புனர்பு செய்வதற்கும் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவ செல்விற்கு அரசு ஒரு லட்ச ரூபாய் வாங்க வேண்டும் பாதிக்கப்பட்ட மாணவர்களை அரசு மருத்துவமனையில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார் ஆர் கே ஆர் அனந்தராமன் முன்னாள் அரசு கொறடா.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
School wall collapses on 3 students Sensation in Puducherry!