காலாப்பட்டு மத்திய சிறையில் செல்போன் பறிமுதல்..பிரபல ரவுடி மீது புகார்!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பிரபல ரவுடி மர்டர் மணிகண்டனிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மொபைல்போனை பறிமுதல் செய்த சிறை நிர்வாகம், காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பிரபல ரவுடி மர்டர் மணிகண்டன் தொடர்ந்து சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்ததால், கடந்த டிசம்பர் மாதம் ஏனாம் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து உடல்நிலை பரிசோதனைக்காக கடந்த 2-ம் தேதி மர்டர் மணிகண்டன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து  வந்தனர்.

அதனை தொடர்ந்து அங்கு சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதால், காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.நேற்று மாலை சிறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுப்பட்டனர்.அப்போது, மர்டர் மணிகண்டனிடம் இருந்து ஒரு மொபைல் போனை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

அப்போது சிறை காவலர்கள் ரவுடி மர்டர் மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில், தன்னை ஏனாம் சிறைக்கு மாற்றிய சிறை நிர்வாகத்தை பழிவாங்கும் நோக்கில், சிறையில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதுபோல் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மொபைல்போனை பறிமுதல் செய்த சிறை நிர்வாகம், காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mobile phone seized from Kalapattu Central Prison Complaint against famous gangster!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->