கூடுதல் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது..  தி.மு.க.-காங். வெளிநடப்பு! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் ரங்கசாமி விளக்கம் கொடுத்து பேசினார் ஆனால் இருப்பினும் இந்த விளக்கத்தை ஏற்காமல் எதிர்க்கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், கென்னடி, சம்பத், செந்தில் குமார், நாக.தியாகராஜன், ரமேஷ்பரம்பத், வைத்தியநாதன் ஆகியோர் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி சட்டசபையில் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சபையின் அடுத்த அலுவலுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சென்றார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் சிவா குறுக்கிட்டு பேசியதாவது:-

மத்திய அரசு தொடர்ந்து புதுவையை வஞ்சித்து வருகிறது என்றும்  நிதி கமிஷனில் புதுவையை சேர்க்கவில்லை. மத்திய பட்ஜெட்டில் புதுவைக்கு கூடுதல் நிதி வழங்கவில்லை என்றும் ரெயில்வே, துறைமுக விரிவாக்க திட்டங்கள் இடம்பெறவில்லை, நாட்டிலேயே ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரிதான் அதிகளவில் பாதிக்கப்பட்டது என்றும் ஆனால் அதற்கான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும்  மத்தியிலும், புதுவையிலும் ஒரே கூட்டணியின் ஆட்சிதான் நடக்கிறது என பேசினார்.

மேலும் தமிழகத்தை போல மாற்று ஆட்சி இருந்தாலும், வஞ்சிப்பதில் அர்த்தம் இருக்கும் என்றும்  இதனால் மத்திய அரசு புதுவையை வஞ்சிப்பதை கண்டித்து சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

அப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறுக்கிட்டு, ஃபெஞ்சல் புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.61 கோடி வழங்கியுள்ளது என்றார்.இதையடுத்து அமைச்சர் நமச்சிவாயம் பேசினார் :அப்போது ,மத்திய அரசு புதுவைக்கு தேவையான நிதியை தொடர்ந்து வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஒத்துழைப்போடுதான் புதுச்சேரியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

அதனை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, அசோக்பாபு, வி.பி. ராமலிங்கம், வெங்கடேசன், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கர், சீனிவாச அசோக் ஆகியோர் பேசினர். இதற்கு எதிராக தி.மு.க.-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பேசினர்

இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அப்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், ஜான்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர், மத்திய அரசு பற்றி எதிர்க்கட்சியினர் பேசிய பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ. நாஜிம், இன்று உங்கள் நாடகம் என்ன? வெளியில் ஒன்று செய்வீர்கள், உள்ளே ஒன்று செய்வீர்கள், முதலில் மண்ணை நேசியுங்கள், பின்னர் கட்சியை நேசியுங்கள் என்றார்.

அப்போது முதலமைச்சர் ரங்கசாமி விளக்கம் கொடுத்து பேசினார் ஆனால் இருப்பினும் இந்த விளக்கத்தை ஏற்காமல் எதிர்க்கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், கென்னடி, சம்பத், செந்தில் குமார், நாக.தியாகராஜன், ரமேஷ்பரம்பத், வைத்தியநாதன் ஆகியோர் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Central Government is seating by not allotating additional funds. DMK-Congress Walkout!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->