குஷ்பூவோட ஆசை.. இது தானாம்.. ஆனா நிறைவேறாம போய்ச்சே., ப்ச்ச்.! - Seithipunal
Seithipunal


90களில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 கதாநாயகியாக வலம் வந்தவர் குஷ்பூ. தமிழ் சினிமா ரசிகர்கள் கோயில் கட்டி கும்பிடுமளவிற்கு அவர் மீது அன்பும் பாசமும் வைத்திருந்தனர். தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி ஹீரோக்கள் தொடரும் இணைந்து நடித்த இவர் திருமணத்திற்குப் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

1980 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 1989 ஆம் ஆண்டு வெளியான வருஷம் 16 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தத்  திரைப்படத்தைத் தொடர்ந்து இவர் நடித்த சின்னத்தம்பி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சூப்பர் ஸ்டாருடன் பாண்டியன் என்ற திரைப்படமும்  அண்ணாமலை திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. கமல்ஹாசனுடன் இவர் நடித்த சிங்காரவேலன் திரைப்படம்  என தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர்.

பல பிரம்மாண்டமான வெற்றி படங்களை கொடுத்த குஷ்பூ தற்போது கணவர் சுந்தர்.சி உடன் இணைந்து பட தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் இவருக்கு நேஷனல் கமிஷன் ஃபார் வுமன் என்ற அமைப்பில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் தான் இந்த பணியில் சேர விரும்பினேன் என குஷ்பூ தற்போதைய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் கூறியிருக்கும் அவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் விமான பணிப்பெண்ணாக வேண்டும் என்று தான் விரும்பியதாக தெரிவித்துள்ளார். விமானத்தில் பணியாற்றும்போது உலகை சுற்றி வரலாம் என்பதால் அந்த வேலை மீது தனக்கு சிறுவயதில் ஈடுபாடிருந்ததாக தெரிவித்துள்ளார் குஷ்பூ.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ace actress kushboo wants to become airhostess when shes child


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->