52 வயசில கும்முனு இருக்க... ஆபாச மெஸெஜ் அனுப்பியவரை காரி துப்பி விளாசிய ஐஸ்வர்யா.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பியபலமான நடிகையான லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா.இவர் பாக்கியராஜ் நடிப்பில் உருவான ராசுகுட்டி என்ற திரைப்படத்தின் மூலம்  தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். எஜமான் படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தமிழ் திரைப்படங்கள் தவிர தெலுங்கு மலையாளம் என பழமொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

தற்போது இவர் யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த சேனலில்  பெண்கள் அழகு சாதன பொருட்கள் மற்றும் சோப்பு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த சேனலில் தனக்கு ஆர்டர்களை போடுவதற்காக தனது வாட்ஸ் ஆப்‌நம்பரை குறிப்பிட்டிருந்தார். அதிலிருந்து இவருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பும்  வீடியோக்களும் வரத் தொடங்கின. இதனால் கோபமடைந்த அவர் தனக்கு ஆபாச மெசேஜ் மற்றும் வீடியோக்களை அனுப்பி நபர்களின் புகைப்படங்களை வீடியோவில் போட்டு காரி துப்பி இருக்கிறார்.

இது குறித்து பேசியிருக்கும் அவர்  எனக்கு சில மெசேஜ்கள் மிகவும் கீழ்தரமாக வந்தன  அவற்றைப் பற்றி பேச வேண்டாம் என்று தான் இருந்தேன். ஆனால் எனது மகன்தான் பெண்களுக்கு இப்படி தாக்குதல் வரும்போது நீ அதற்கு எதிர்வினையாற்றவில்லை என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்று கேட்டான் அதன் காரணமாகவே நான் இந்த வீடியோவை பதிவு செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக ஜே. அசுரமூர்த்தி மற்றும் ரிச்சர்டு என்ற நபர்கள் மிகவும் கீழ்த்தரமாக மெசேஜ் அனுப்பவுள்ளனர். வயசு 52 ஆனாலும் கும்முன்னு இருக்க என்று மெசேஜ் அனுப்பியதோடு தங்களது அந்தரங்க உறுப்புகளின் புகைப்படங்களையும் அனுப்பி இருக்கின்றனர். மனோபஸ் நின்று போன 52 வயது கிழவ விட நான் இப்படி எல்லாம் மெசேஜ் அனுப்புவதற்கு கேவலமா இல்லையா? மானங்கெட்ட பசங்களா! என்று அந்த வீடியோவில் மிகவும் கோபத்துடன் பேசியிருக்கிறார் ஐஸ்வர்யா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

acress aishwarya tear those poples who sent her obscene messages


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->