தி கோட் படத்தில் நடிகர் அஜித்! ஹிண்ட் கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடிப்பில் வருகின்ற செப் 5ம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது "தி கிரேட்டெஸ்ட் ஆப்  ஆல் டைம்" திரைப்படம். இது நடிகர் விஜயின் 68வது திரைப்படம் என்பதும், வெங்கட் பிரபுவோடு விஜய் இணையும் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து பல அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது மட்டுமல்லாமல் இன்று வெளியாகும் கோட் படத்தின் நான்காவது சிங்களில்நடிகர் விஜயோடு இணைந்து, பிரபல நடிகை திரிஷா நடனமாடியுள்ளதாகவும், ஆகையால் அவரும் இந்த படத்தில் கேமெியோ கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது பரவி வரும் ஒரு தகவலின்படி, GOAT திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் ஒரு சிறிய ரெஃபரன்ஸ் இருக்கும் என்றும், அது அவருடைய குரலாகவோ, அல்லது அவருடைய ஒரு காட்சியாகவோ, அல்லது அவர் பேசிய ஒரு வசனமாகவோ இருக்கலாம் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல இப்போது அஜித் நடித்து வரும் "குட் பேட் அக்லி" திரைப்படத்தில் தளபதி விஜயின் ரெஃபரன்ஸ் இருக்கும் என்று வெங்கட் பிரபுவே கூறியதாக தற்பொழுது சில தகவல்கள் வெளியாகிவருகின்றது..

இந்த தகவலினால் ரசிகர்களிடையே 'தி கோட்' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Ajith in The Code Director Venkat Prabhu gave a hint


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->