சத்தீஷ்காரில் தேடுதல் வேட்டை.. இரண்டாவது நாளாக பாதுகாப்புப்படையினர், நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கி சண்டை! - Seithipunal
Seithipunal


சத்தீஷ்காரில் பாதுகாப்புப்படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே இரண்டாவது நாளாக துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சத்தீஷ்கார் மாநிலம் உள்ளது. இந்தியாவில் இம்மாநிலத்தில், நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் அடிக்கடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்த தேடுதல் நடவடிக்கையின் போது அவ்வப்போது பாதுகாப்புப்படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே என்கவுன்டர் நடைபெறுகிறது.இதில் நக்சலைட்டுகள் ஒடுக்கப்பட்டு என்கவுன்டர் செய்யப்பட்டுவருகிறது. 

இந்தநிலையில் , சத்தீஷ்காரின் கரியாபந்த் மாவட்டத்தின் குல்ஹாதி காட் பபாதிகி மலையின் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில்  பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டயை நடத்தினர். இதையடுத்து, அந்த இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே இன்று துப்பாக்கி சண்டை வெடித்தது. தற்போதுவரை இந்த மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இது குறித்த விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.நேற்று 7 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Search operation in Chhattisgarh Gunfight between security forces and Naxalites enters second day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->