#சற்றுமுன்: நடிகர் அஜித் முக்கிய நபருடன் சந்திப்பு.! அடுத்த பட அப்டேட் விரைவில்.?!  - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் இறுதியாக எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்த வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரியில் வெளியாகியது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படம் உருவாகி வந்த நிலையில், வலிமை அப்டேட் கேட்டு ஒருவரையும் விடாமல் அஜித் ரசிகர்கள் தொந்தரவு செய்தது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான்.

இந்நிலையில் அடுத்ததாக இதே கூட்டணி தொடர்கிறது. அஜித்தின் Ak 61 என்று குறிப்பிடப்படும் திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்க, எச் வினோத் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் 60% முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு மற்றும் சண்டை காட்சிகள் மீதம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் நடிகை மஞ்சு வாரியர் லீப் ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகிறது. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. 

இத்தகைய சூழலில் நடிகர் அஜித் லைக்கா நிறுவன தலைவர் சுபாஸ்கரனை சந்தித்துள்ளார். அதற்கான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனவே, அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் மூழ்கியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor ajith Meet lyca subaskaran


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->