விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்.. நடந்தது என்ன ! - Seithipunal
Seithipunal


 

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை நடிகர் அஜித் தொடங்கவில்லை என விமர்சனங்கள் வந்து  கொண்டிருக்கும் நிலையில், கடந்த நவம்பர் மாதம் விடாமுயற்சி படத்துக்காக நடிகர் அஜித் தனது உயிரை பணயம் வைத்து எப்படி நடித்துள்ளார் பாருங்க என  சுரேஷ் சந்திரா சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/LycaProductions/status/1775798815926395119?t=ILgkcjF_HiSS4ZhZTmMwGA&s=19


நடிகர் அஜித் குமார் உடல் முழுக்க ஏற்கனவே  ஏகப்பட்ட காயங்கள் உள்ளநிலையில், இப்படிப்பட்ட காட்சியில் அஜித் நடித்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பிஉள்ளது. ஆனால், அதையெல்லாம் மீறி தனது ரசிகர்களுக்காக அவர் எந்தளவுக்கு ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் பாருங்க என சுரேஷ் சந்திரா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.


விரைவில் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் விடாமுயற்சி படத்தில் இருந்து  இப்படி ஒரு பிரத்யேக காட்சி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

உயிரை பணயம் வைத்த  அஜித் சினிமாவில் பைக் ,கார்கள் பறப்பது, விபத்து நடப்பது எல்லாம் சர்வ சாதாரணமாக நடப்பது போல காட்டுகின்றனர். ஆனால், அதற்கு பின்னால் ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் ஸ்டண்ட் நடிகர்களின் கடினமான உழைப்பு உள்ளது என பலருக்கும் தெரியாத உண்மை. கார், பைக் ஓட்டுவதில் கில்லாடியான அஜித் குமார் ஹை ரிஸ்க் எடுத்து விடாமுயற்சி படத்துக்காக செய்திருக்கும் ஸ்டண்ட் காட்சி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

வலிமை படத்தில் அஜித் நடித்து வெளியான வலிமை படத்தில் பைக் ஓட்டும் காட்சியில் நடிகர் அஜித் குமாருக்கு விபத்து ஏற்பட்ட காட்சிகளையும் படம் வெளியாகும் முன்னரே வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். இந்நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தில் அஜித் எடுத்த ஹை ரிஸ்க் காட்சியை வெளியிட்டுள்ளனர்.

சுரேஷ் சந்திரா வெளியிட்ட விடாமுயற்சி படத்தின் விபத்து வீடியோவை 10 நிமிடத்தில் 2.3 மில்லியன் ரசிகர்கள் பார்த்து விட்டனர். கண்டிப்பாக 24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளை கடந்து இந்த வீடியோ டிரெண்டாகி விடும் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை என்பது அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

வகடந்த நவம்பர் மாதம் அஜர்பைஜானில் படமாக்கப்பட்ட விபத்துக் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது. அதற்கான முன்னோட்டமாகவே தொடர்ந்து நடிகர் அஜித்தின் புகைப்படங்களும் வீடியோக்களும் பப்ளிசிட்டி ஸ்டண்டாக வெளியாகி வருகின்றன.

குட் பேட் அக்லி: விடாமுயற்சி படத்துக்காக அஜித் குமார் இப்படி ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதை பார்த்தால் ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்தில் மேலும், அதிகப்படியான ரிஸ்க் காட்சிகளை தாராளமாக வைப்பார் என்றே தெரிகிறது. இந்த வயதிலும் ரசிகர்களுக்காக ரிஸ்க் எடுத்து சிஜியோ டூப்போ பயன்படுத்தாமல் ஒரிஜினலாக அஜித் நடித்துள்ளதை பார்த்து திரையுலகமே ஆடிப்போய் விட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Ajith who was involved in an accident.. What happened!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->