நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், இயக்குனர் மகிழ்த்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். ராக் ஸ்டார் அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 

இந்த படத்தில் நடிகர் அஜித்துடன், நடிகர்கள் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாக கூறுகின்றனர். ஆனால், அடுத்த ஆண்டு அடுத்தடுத்து நடிகர் அஜித்தின் 2 படங்கள் வெளியாகவுள்ளதால் அஜித் ரசிகர்கள் கண்டிப்பாக உற்சாகமடைவார்கள் என கூறப்படுகிறது.

இதன் படி, விடாமுயற்சி திரைப்படம் அக் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படத்தின் பணிகள் எதிர்பார்த்த நாட்களில் முடிவடையாததால் விடாமுயற்சி திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Ajiths movie Vidaamuyarchi is releasing for Pongal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->