தேசிய விருது வாங்க மனைவியுடன் கிளம்பிய அல்லு அர்ஜுன் - வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தேசிய விருது வாங்க மனைவியுடன் கிளம்பிய அல்லு அர்ஜுன் - வைரலாகும் புகைப்படம்.!

கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டின் 69 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்த விருதில், சிறந்த நடிகருக்கான விருதை 'புஷ்பா' படத்திற்காக அல்லு அர்ஜுன் பெற்றார். இந்த விருதை வாங்கியதுடன் முதல் தேசிய விருது பெரும் தெலுங்கு நடிகர் என்ற பெருமையையும் அல்லு அர்ஜூன் பெற்றுள்ளார்.

'புஷ்பா' படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டதால் 'புஷ்பா 2' படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது. அதேபோல், 'புஷ்பா2' படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ, புகைப்படம் உள்ளிட்டவற்றை படக்குழு வெளியிட்டு வருகிறது.

சமீபத்தில், அல்லு அர்ஜூன் பிறந்த நாளுக்கு வெளியான 'வேர் ஈஸ் புஷ்பா?' என்ற கிளிம்ப்ஸூம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஏற்கனவே, 'புஷ்பா' படத்திற்காக தேசிய விருது அல்லு அர்ஜூனுக்கு அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், நாளை மாலை தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறுகிறது. 

இதற்காக, அல்லு அர்ஜுன் தன் மனைவியுடன் தற்போது டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். இதற்கிடையே அல்லு அர்ஜுன் விமான நிலையத்தில் மனைவியுடன் கிளம்பும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது, தற்போது ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor allu arjun going to delhi with wife for get national award


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->