பிரபல தமிழ் நடிகரின் மகன், ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி! உற்சாகமான பேட்டி!
Actor Chinni Jayanth's son Passed UPSC Exam
பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளிவில் 75-வது இடம் பெற்றுள்ளார்.
இந்திய குடிமைப்பணிகளான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக 2019-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது. ஹரியானா மாநிலத்தினை சேர்ந்த பிரதீப் சிங் என்பவர் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக அளவில் கணேஷ்குமார் என்பவர் முதலிடம் பிடித்தார். இந்நிலையில் திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் ஜெயந்த் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75-ஆவது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு ஸ்ருதன் ஜெய் கூறியதவாது, தான் வாழ்க்கையில் என்னாவாக வேண்டுமென தனக்கு பெற்றோர் முழு சுதந்திரம் அளித்ததாகவும், கல்வி, சுற்றுச்சூழல், தொழில்வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
English Summary
Actor Chinni Jayanth's son Passed UPSC Exam