பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களில் கருவை கலைக்கலாமா, கூடாதா? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
Should women who have been sexually assaulted be allowed to abort their fetuses
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் கர்ப்பத்தை கலைக்கலாமா..? என்ற கேள்வி பதில் கிடைத்துள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கு நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி மற்றும் நீதிபதி பிரசாந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. இதன்போது சிறுமியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது 19 வார கர்ப்பிணியாக உள்ளார் என்றும், மைனர் சிறுமியான அவர் குழந்தையை பெற்று வளர்க்கும் பக்குவத்தில் இல்லை என்றும் வாதிட்டுள்ளார்.
![](https://img.seithipunal.com/media/abor-s2rkd.jpg)
அத்துடன், சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஏற்பட்ட கர்ப்பம் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இது மனுதாரருக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கர்ப்பமடைந்த பெண்ணின் கருவை கலைக்கவிடாமல் செய்து, குழந்தை பெற்றுக்கொள்ள வைப்பது என்பது அந்த பெண்ணின் அடிப்படை மனித உரிமை என்றும், அது கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை மீறுவதாகும் என்று தெரிவித்துள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/abo-e969x.jpg)
அத்துடன், இவ்வாறு பாலியல் வன்கொடுமையால் உருவாகும் குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமா? அல்லது கர்ப்பத்தை கலைக்க வேண்டுமா? என முடிவு செய்யும் உரிமை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மருத்துவ கருத்தரிப்பு சட்டம் பிரிவு 3(2)-ன் படி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருவருக்கு மருத்துவரீதியாக கர்ப்பத்தை கலைக்கும் உரிமை உள்ளது என்று நீதிபதிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
English Summary
Should women who have been sexually assaulted be allowed to abort their fetuses