சோகத்தில் மூழ்கிய திரையுலகம் - நடிகர் டெல்லி கணேஷ் மறைவு.!! - Seithipunal
Seithipunal


நாடாக நடிகராக இருந்து தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் டெல்லி கணேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள டெல்லி கணேஷ், நகைச்சுவை, குணச்சித்திரம் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் திறம்பட நடித்தவர் ஆவார்.

1976-ல் திரைத்துறைக்கு வந்த இவர் தக்ஷிண பாரத நாடக சபா எனப்படும் 'டெல்லி' நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். இவர் நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம். டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது. 

சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், ஆஹா, தெனாலி, சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

அதுமட்டுமல்லாமல், இவர் 8 முக்கிய சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். 1979ம் ஆண்டு பசி திரைப்படத்திற்கு "தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். அதோடு, 1993 - 1994ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அரசின் "கலைமாமணி விருது"ம் டெல்லி கணேஷ் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் இன்று காலமானார். அவரது உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor delhi ganesh passed away


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->