திடீரென மொட்டை போட்ட நடிகர் தனுஷ்.. திருப்பதியில் பயபக்தியுடன் சாமி தரிசனம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கேங்ஸ்டராக நடித்துள்ளார். தமிழ் ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பதற்காக அதிக அளவில் முடியை வளர்த்துக் கொண்டு அதே கெட்டப்பில் கடந்த சில மாதங்களாக வலம் வந்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததை அடுத்து தனது தாய், தந்தை, இரண்டு மகன்களுடன் திருப்பதிக்கு சென்ற நடிகர் தனுஷ் இன்று காலை சாமி தரிசனம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி திருப்பதி ஏழுமலையானுக்கு தனது முடியையும் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

மேலும் அவரது 2 மகன்களும் முடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கேப்டன் மில்லர் படத்திற்காக முடியை வளர்த்து வந்த நடிகர் தனுஷ் தற்போது மொட்டை அடித்திருப்பதால் கேப்டன் மில்லர் படத்தின் அனைத்து சூட்டிங் பணிகளும் முடிந்துள்ளதாகவே தெரிய வருகிறது.

இதனைத் தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தின் டிரைலர், பாடல் போன்ற அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என நடிகர் தனுஷின் ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். தனுஷ் மொட்டை அடித்து திருப்பதியில் வலம் வரும் வீடியோ, மற்றும் புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Dhanush suddenly went bald in Tirupati


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->