மனைவியின் ஆசையை நிறைவேற்ற பிக்பாஸில் களமிறங்கும் சின்னத்திரை நடிகர்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிரிவோம்-சந்திப்போம்’ உள்ளிட்ட சீரியல்களில் ஒன்றாக நடித்து காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி ரச்சிதா-தினேஷ். ஆனால், திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

இருவருக்கும் இன்னும் சட்டப்படி விவாகரத்து ஆகாமல் இருக்கும் நிலையில், கடந்த ஆறாவது பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக உள்ளே நுழைந்தார் ரச்சிதா. அதில், இருந்தவரை தினேஷ் குறித்து அவர் எதுவுமே பேசவில்லை.
அந்த சீசனில் தினேஷ் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைவார் என்று எதிர்பார்க்கப்பட்டடது. 

ஆனால், அந்த வாய்ப்பு தவறி போனது. சமீபத்தில் கூட ரச்சிதா தினேஷ் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இருப்பினும், தினேஷ் ரச்சிதாவின் தந்தை மறைவுக்கு பெங்களூர் சென்று அஞ்சலி செலுத்தினார். 

இந்த நிலையில், தினேஷூக்கு இந்த பிக் பாஸ் சீசனில் வைல்ட் கார்டு மூலம் உள்ளே நுழைய மீண்டும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய சீசனில் பிக் பாஸ் டைட்டில் வெல்ல வேண்டும் என்ற ரச்சிதாவின் ஆசையை இந்த சீசனில் நிறைவேற்றி அவருக்கு சமர்ப்பிக்க இருக்கிறார் தினேஷ் என்று அவரது நண்பர்கள் வட்டாரம் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor dinesh joined big boss season 7


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->