ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் ஜெயம் ரவி! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''சைரன்''. இந்த திரைப்படம் நேற்று வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இந்நிலையில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவியிடம் அவரது ரசிகர்கள் பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

ஆனால் அந்த விழாவில் கலந்து கொண்ட ரசிகர் ஒருவர் ஜெயம் ரவியை நெருங்க முடியவில்லை. இதனால் வருத்தம் அடைந்த ரசிகர் அவரது எக்ஸ் வலைதளத்தில், 'நான் உண்மையிலேயே உங்களை வெறுக்கிறேன் ஜெயம் ரவி அண்ணா. 

நெருக்கமான ரசிகர்கள் மட்டுமே உங்களுக்கு தேவைப்பட்டால் எதற்காக அனைத்து ரசிகர்களையும் அழைத்தீர்கள். இது எனக்கு மிகவும் மோசமான நாள். இது போல் நடந்ததை இனி உங்களிடம் பார்க்கக் கூடாது என குறிப்பிட்டிருந்தார். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயம் ரவி இதற்கு பதிலளிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மன்னித்துவிடுங்கள் சகோதரரே. 

நான் தனிப்பட்ட முறையில் 300க்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்துக் கொண்டேன். எப்படி உங்களை தவறவிட்டேன் என தெரியவில்லை. சென்னைக்கு வாருங்கள் உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன். என்னை வெறுக்காதீர்கள் அன்பை மட்டுமே பரப்புங்கள் என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Jayam Ravi apologized to fan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->