அவன் எனக்கு தான் வேணும் - ஒரே வாலிபருக்காக தெருவில் சண்டை போட்ட பள்ளி சிறுமிகள்.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாக்பத் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இரண்டு சிறுமிகள் ஒரே வாலிபரை காதலித்து வந்துள்ளனர். தாங்கள் ஒரே சிறுவரை காதலிப்பது குறித்து இருவருக்கும் தெரியாமால் இருந்துள்ளது.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் விவரம் தெரியவந்துள்ள நிலையில், ஒரே வாலிபரை விரும்புவதை அறிந்த இரண்டு சிறுமிகளும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள, பரபரப்பான சாலை ஒன்றில், ஒருவரை ஒருவர் முடியை பிடித்து இழுத்து சராமாரியாகத் தாக்கி உள்ளனர். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், ஓடி வந்து சிறுமிகள் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். இருப்பினும், அந்த சிறுமிகள் ஒருவரை ஒருவர் மீண்டும் தாக்கிக் கொண்டனர். 

பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் நீண்ட நேரம் போராடி இரண்டு சிறுமிகளையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two girls fight for one boy friend in uttar pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->