அதிக வாகன பதிவு - தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 1,373 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இங்கு கடந்த ஆண்டு (2024) மட்டும் 2 கோடியே 61 லட்சத்து 83 ஆயிரத்து 620 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசுக்கு ரூ.98 ஆயிரத்து 494 கோடியே 99 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

தேசிய அளவில் வாகன பதிவில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, 2-வது இடத்தில் கர்நாடகமும், 3-வது இடத்தில் தமிழகமும், 4-வது இடத்தில் உத்தரபிரதேசமும், 5-வது இடத்தில் கேரளாவும் உள்ளன. இந்த பட்டியலின்படி, நாட்டிலேயே தென்மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னணியில் இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் மொத்தம் 148 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. அதில் கடந்தாண்டு (2024) 19 லட்சத்து 53 ஆயிரத்து 513 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ரூ.10 ஆயிரத்து 76 கோடியே 64 லட்சம் வருவாய் இருந்தது. 

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் வாகனங்கள் பதிவில் சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பூந்தமல்லி, 3-ம் இடத்தில் கோவை வடக்கு, 4-வது இடத்தில் தாம்பரம், 5-வது இடத்தில் கோவை தெற்கு உள்ளது. இதே சமயம் வருவாய் ஈட்டி தருவதில் சென்னை மேற்கு முதலிடத்திலும், 2-வது இடத்தில் சென்னை தெற்கு, 3-வது இடத்தில் சென்னை மத்தியம், 4-வது இடத்தில் தாம்பரம், 5-வது இடத்தில் பூந்தமல்லியும் இருக்கின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu won third place vehicles register


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->