ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து - நோயாளிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை வளாகத்தில் ஐந்து மாடி கட்டிடம் பல்வேறு சிகிச்சை பிரிவுகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

இதில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இரண்டாவது மாடியில் பேட்டரி, இன்வெர்ட்டர் வைக்கப்பட்டு இருந்த அறையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது.

உடனே அங்கு இருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உடனடியாக அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். மேலும், புகை மூட்டத்தில் சிக்கிய சில நோயாளிகள், மருத்துவ பணியாளர்கள், நர்சுகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

புகைமூட்டம் அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியதனால் அங்கிருந்தவர்களும் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஒரே நேரத்தில் நோயாளிகள் வெளியேறியதால் கூட்டத்தில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் தீயை அணைக்கும் பணியையும் மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன்ஜீத்சிங் காலோன், போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர். மேலும், அதிரடிப்படை போலீசாரும் வரவழைக்கப்பட்டு, துரிதமாக செயல்பட்டு மருத்துவமனையில் இருந்தவர்களை வெளியே கொண்டு வந்தனர்.

இந்த தீவிபத்தில் மருத்துவமனையில் இருந்த பல்வேறு உபகரணங்கள், மின்சாதனங்கள் சேதம் அடைந்துள்ளன. அதிலும் குறிப்பாக இன்வெர்ட்டர் அறையில் இருந்த 25-க்கும் மேற்பட்ட பேட்டரிகள் கருகிவிட்டன. தீ விபத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fire accident in ramanathapuram government hospital


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->