மணிப்பூர் வன்முறை - அமித்ஷா கூட்டிய அவசர கூட்டம் - அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில் சமீப காலமாக மெய்தி இன மக்களுக்கும், குறுதி இன மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் வன்முறையாக மாறியது. இந்த நிலையில், மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை நீடித்து வருவதால், அமைதியை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது தொடர்பாக அமித்ஷா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தின் தேர்தல் பேரணிகளை ரத்து செய்த அமித்ஷா அவசர கூட்டத்தை கூட்டியிருந்தார். 

இந்தக் கூட்டத்தில், மணிப்பூரில் உள்ள பாதுகாப்பு நிலைமையை உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆய்வு செய்ததோடு, அமைதியை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மணிப்பூரில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து போராட்டங்கள், வன்முறை சம்பவங்களால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister amitsha order security in manipur for violation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->