எதற்கும் துணிந்தவன் பட இயக்குநருடன் இணையும் ஜெயம் ரவி - வெளியானது மரண அப்டேட்.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் "காதலிக்க நேரமில்லை" என்ற படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

இந்த நிலையில், ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. அதாவது, ஜெயம் ரவி அடுத்து நடிக்க இருக்கும் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தை அடங்கமறு மற்றும் சைரன் படங்களை தயாரித்த ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத வாக்கில் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் கிராம பின்னணியில் உருவாகும் ஒரு குடும்ப பொழுதுபோக்கு கதையம்சம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. கடைசியாக இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய "எதற்கும் துணிந்தவன்" படம் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor jayam ravi joined work director pandiraj


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->