மறைந்த நடிகர் J.K.ரித்தீஷ் மனைவிக்கு 6 மாதம் சிறை தண்டனை.. காரணம் என்ன.? - Seithipunal
Seithipunal


செக் மோசடி வழக்கில் மறைந்த நடிகர் ரித்தீஷின் மனைவி ஜோதிஸ்வரிக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் சில படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஜேகே ரித்தீஷ். இவர் சினிமா மட்டுமில்லாமல் அரசியலிலும் கால்தடம் பதித்துள்ளார். அந்த வகையில் திமுக சார்பில் போட்டியிட்டு ராமநாதபுரம் எம்.பி-யாக பதவி வகித்தார். அதன்பின்னர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு திடீரென மரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மரணம் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடிகர் ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதிஸ்வரி நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் நகை பட்டறை வைத்திருக்கும் திருச்செல்வம் என்பவரிடம் நகை வாங்கியதற்கு 60 லட்சம் ரூபாய் பணம் தராமல் இருந்துள்ளார். மேலும் அதற்காக கொடுத்த காசோலையும் பணம் இல்லாமல் திரும்பியுள்ளது.

இதுகுறித்து திருச்செல்வம் காரைக்குடி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில் பணம் கொடுக்காத ஜோதிஸ்வரிக்கு 6 மாத சிறை தண்டனையும், 60 லட்சம் ரூபாய் பணத்தையும் கட்ட வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் பணத்தை கட்ட தவறினால் மேலும் மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 1 மாதத்திற்குள் பணத்தை கொடுக்க வேண்டும் என்று கூறி பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor JK Rithish wife 6 month Jail


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->