சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின் 160-வது ஆண்டு விழா; சிறப்பு மலரை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! - Seithipunal
Seithipunal


இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு விழா மற்றும் சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின் 160-வது ஆண்டு விழா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. குறித்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அத்துடன், இந்த விழாவில் சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சிறப்பு மலரையும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இவ்விழாவில் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன், ஆர்.கிரிராஜன், இந்திய கூடுதல் சொலிசிடர் ஜென்ரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இந்திய முன்னாள் அட்டர்னி ஜென்ரல் கே.பராசரன், சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் எம்.பாஸ்கர், செயலாளர் எஸ்.திருவேங்கடம், மூத்த வழக்கறிஞர் ராஜய்யா உள்ளிட்ட வழக்கறிஞர்கள், சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister MK Stalin releases special magazine of the Chennai Bar Association


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->