வெளியானது விஷ்ணு விஷாலின் புதிய படத்தின் டைட்டில்.!
vishnu vishal new movie tittle released
'பிரேமலு' படத்தின் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை மமிதா பைஜு. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படத்தின் மூலம் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அதன் படி மமிதா பைஜு தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக 'ரெபல்' படத்தில் அறிமுகமானார். தற்போது விஜய்யின் 'ஜன நாயகன்' படத்திலும் நடித்து வருகிறார். தென் இந்திய திரையுலகில் மளமளவென முன்னேறி வரும் மமிதா பைஜு தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார்.
இதைத் தொடர்ந்து மமிதா 'முண்டாசுப்பட்டி' மற்றும் 'ராட்சசன்' பட இயக்குனர் ராம் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். இதன் மூலம் ராம் குமாருடன் மூன்றாவது முறையாக விஷ்ணு விஷால் இணைந்துள்ளார்.
சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு "இரண்டு வானம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
English Summary
vishnu vishal new movie tittle released