'கூலி' திரைப்படத்தின் OTT உரிமையை பல கோடிகள் கொடுத்து வாங்கியுள்ள பிரபல நிறுவனம்..? - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படம்  'கூலி'.  பான் இந்தியா படமாக இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

படத்தில் ரஜினியுடன் இணைந்து சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இவர்களுடன், பூஜா ஹெக்டே இந்த படத்தில் குத்து பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத், சென்னை மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இந்நிலையில், படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும், படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த 'கூலி' படம் ஆகஸ்ட் மாதம் அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில், படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி உரிமை பிரபல நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது. 'கூலி' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் உரிமையை அமேசான் பிரைம் சுமார் ரூ.120 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவலா என்பது தெரியவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The famous company that has bought the OTT rights of the film Coolie for several crores


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->