புதுச்சேரி மாநிலத்தில் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா..MLA அசோக் பாபு தகவல்!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில்  இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துவதற்கு புதுச்சேரி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.பி. அசோக் பாபு தலைமையில் ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது.

கவலை, மன அழுத்தம், துக்கம், மகிழ்ச்சி, ஏமாற்றம் வெற்றி, தோல்வி என எல்லா நிலைகளிலும் மனங்கள் தேடுவது இளையராஜாவின் இசையைத்தான்.இப்படி முதல் படத்திலேயே தனது இசை ருத்ரதாண்டவத்தை தொடங்கிய இளையராஜா இன்று 1500க்கும் அதிகமான படங்களை கடந்து தனது இசை ராஜ்ஜியத்தை நிறுவிக் கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. 

ஏறக்குறைய மூன்று தலைமுறைகளாக அவர் கட்டமைத்த இசை சாம்ராஜ்யம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அழியாமல் வாழும் என்பது நிதர்சனமான உண்மை.சமீபகாலமாக இளையராஜா வெளிநாடுகளிலும்,தமிழகத்திலும் தனது இசை நிகழ்ச்சியை நடத்தி மக்களின் மனங்களை வென்றுவருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் இங்கிலாந்து தலைநகரம் லண்டனில்   நடைபெற்ற மிகப்பெரிய இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது முதல்  சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தி சாதனை படைத்தார்.இதையடுத்து சாதனை படைத்துள்ள இசை ஞானி இளையராஜா அவர்களை இன்று சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில்  புதுச்சேரி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.பி. அசோக் பாபு அவர்கள் சந்தித்து சால்வை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி  வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 அப்போது புதுச்சேரி மாநிலத்தில் பாராட்டு விழா நடத்துவதற்கு இசைவு அளிக்கும்படி கோரிக்கை வைத்தார்.அதனை தொடர்ந்து  கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இசைஞானி  அவர்கள்  சட்டமன்ற உறுப்பினரிடம் சம்மதம் தெரிவித்தார்..

 மேற்படி நிகழ்ச்சியில் முன்னாள் பாஜக விவசாய அணி தலைவர் புகழேந்தி, விவசாய அணி மாநில செயலாளர் முத்து, விவசாய அணி மாவட்டத் தலைவர் ஹரி நிர்வாகிகள் ரஞ்சித், விஜயரங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ilayaraja felicitated in Puducherry MLA Ashok Babu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->