#எதிர்நீச்சல் சீரியல்: குணசேகரனை பங்கம் செய்த ஞானம்.! நெட்டிசன்கள் செம்ம குஷி.!  - Seithipunal
Seithipunal


சன் டிவியில் அதிகப்படியான ரசிகர்கள் பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். படித்த தைரியமான குறிக்கோளுடன் இருக்கும் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து வீட்டிற்குள் அழைத்து வந்து அவர்களை வீட்டு வேலை, சமையல் வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்தி ஆணாதிக்கத்தின் உச்சபட்ச கொடூரம் நடக்கும் வீடாக காட்டப்பட்டிருக்கும் குணசேகரனின் குடும்பம் தான் கதை.

இதில் நான்கு அண்ணன்கள், ஒரு தங்கை மற்றும் அந்த சகோதரர்களின் மனைவிகள் என்று கதாபாத்திரங்கள் இருக்கின்றன. இதில் நான்காவது தம்பியான சக்தியின் மனைவி தான் ஹீரோயின். பெண் அடிமை தனத்தில் ஊறி போய் கிடக்கும் அந்த பெண்களின் உரிமைகளை மீட்டெடுக்க வந்த பெண்ணாக ஜனனி என்ற ஹீரோயின் காட்டப்பட்டிருப்பார். 

இதில் குணசேகரன் என்ற மூத்த அண்ணன் தான் அனைவரையும் ஆதிக்கம் செலுத்தி அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கேரக்டர். சமீப காலமாக சீரியல் மிகவும் பொறுமையாக செல்கிறது என்று நெட்டிசன்கள் கடுப்பாகி வந்த நிலையில், இந்த வாரம் ஜனனி மீண்டும் பழையபடி தனது உரிமைகளை நிலை நாட்ட தொடங்கியுள்ளார். 

அவருக்கு கணவர் சக்தியும் பக்க பலமாக இருக்கிறார். இத்தகைய சூழலில், சாருபாலா மற்றும் ஜனனி இருவரும் திட்டிய ஆதங்கத்தில் குணசேகரன் கடவுள் மீனாட்சியிடம் புலம்புவதை போல ஒரு சீன் இடம் பெற்று இருக்கும். இதை தற்போது நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

அந்த வீடியோவை இரண்டாவது தம்பி ஞானம் கதாபாத்திரத்தில் நடிக்கும் கமலேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது ரசிகர்களிடம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor kamalesh shared ethirneechal serial meme video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->