சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணை; நீதிமன்றில் ஆஜரான இயக்குனர் அமீர்..! - Seithipunal
Seithipunal


போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக். இவர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் ஜாபர்சாதிக்கின் சகோதரர் முகமது சலீமுமும் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குனர் அமீர் உள்பட 12 பேர் மீதும், ஜாபர்சாதிக்கின் பட தயாரிப்பு நிறுவனம் உள்பட 08 நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று இந்த வழக்கு நீதிபதி எழில்வேலவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது, சிறையில் இருந்து ஜாபர்சாதிக், முகமது சலீம் ஆகியோர் ஆஜர் படுத்தப்பட்டனர்.

 அத்துடன், திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்ட 05 பேர்நீதிமன்றில் ஆஜராகினர். இந்த வழக்கு விசாரணைக்கு பின்பு, வழக்கை பிப்ரவரி 07-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Ameer appeared in the court regarding the trial of the illegal money laundering case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->