சூர்யாவுக்கு டப்பிங் பேசிய தம்பி கார்த்திக் - எந்தப் படத்திற்கு தெரியுமா?
actor karthick dubbing surya movie
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் 'மாற்றான்'. இந்தப் படத்தை கே.வி. ஆனந்த் இயக்கியுள்ளார். காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்த இந்தப்படம் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தனித்துவமான கதையால் ரசிகர்களின் கவனம் பெற்றது.
இந்தப்படம், தெலுங்கில் 'பிரதர்ஸ்' என்ற பெயரில் வெளியானது. இதில், சூர்யாவின் ஒரு கதாபாத்திரத்திற்கு கார்த்தி டப்பிங் பேசியுள்ளார். அதாவது இரட்டையர்களின் அகிலனுக்கு சூர்யாவும் விமலனுக்கு கார்த்தியும் குரல் கொடுத்திருக்கின்றனர்.
நடிகர் சூர்யா, தெலுங்கில் டப்பிங் பேசிய முதல் படம் இதுவாகும். அதே சமயம், சிங்கம் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் சூர்யா பிஸியாக இருந்திருக்கிறார். இதன் காரணமாக தெலுங்கு பதிப்பிற்கு சூர்யாவின் சகோதரரும், நடிகருமான கார்த்தி டப்பிங் பேசியிருக்கிறார்.
English Summary
actor karthick dubbing surya movie