வடகிழக்கு பருவமழை ஜனவரி வரை நீடிக்க வாய்ப்பு..இயல்பை விட 34% கூடுதல் மழை பதிவு!
Northeast monsoon likely to continue till January Rainfall recorded 34% more than normal
இந்த ஆண்டு (2024) வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இயல்பை விட 34% கூடுதல் மழை பதிவாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பரவலான கனமழை மற்றும் தொடர்மழைக்கு இன்று இரவு மற்றும் நள்ளிரவு வாய்ப்பில்லை தென்தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒருசில இடங்களில் மித மற்றும் சற்று கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என தனியார் வானிலையாளர் தெரிவித்துள்ளார்.
மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது இன்று இரவு 10:30Pm மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவிலும் , காரைக்காலுக்கு வடகிழக்கே 700 கிலோமீட்டர் தொலைவிலும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருக்கிறது நான் கடந்த வானிலை தகவலில் இந்த நிகழ்வு முன்னேறி செல்ல முடியாமல் வலுகுறைந்து மீண்டும் வடக்கடலோர (தமிழகம் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோர ) பகுதிகள் நோக்கி திரும்புமென கூறியிருந்தேன் அவ்வாறே இந்த நிகழ்வு வலுகுறைந்து வடக்கடலோர பகுதியை நோக்கி தற்போது நகர தொடங்கியிருக்கிறது .
காற்று அச்சம் வேண்டாம் இது மழையை கொடுக்க கூடிய நிகழ்வு வருகின்ற 24,25 ,26,27+ தேதிகளில் வடதமிழகம், சென்னை மற்றும் புதுச்சேரியில் மிதமானது முதல் சற்று கனமழையையும், ஒருசில இடங்களில் கன மற்றும் மிககன மழையையும் மற்றும் தொடர்மழையையும் கொடுக்கும்...24,25 ,26,27 தேதிகளில் மழைக்குவாய்ப்புள்ளமாவட்டங்கள்மற்றும்பகுதிகள்.வடதமிழகம்,வடக்கடலோரமாவட்டங்கள்,சென்னை,புதுச்சேரி,வடஉள்தமிழகம்,டெல்டா மாவட்டங்கள்.
மேற்கொண்டு இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது மேற்கு தென்மேற்கு நோக்கி நகர்ந்து டெல்டா மற்றும் தென்தமிழக மாவட்டங்களை நோக்கி நெருங்கி வருகின்ற 26,27,28 + தேதிகளில் மிதமானது முதல் சற்று கனமழையையும், ஒருசில இடங்களில் கன மற்றும் மிககன மழையையும் மற்றும் தொடர்மழையையும் கொடுக்கும்...
26,27,28+தேதிகளில்மழைக்குவாய்ப்புள்ளமாவட்டங்கள்மற்றும்பகுதிகள்....வடதமிழகம்,வடக்கடலோரமாவட்டங்கள்,சென்னை,புதுச்சேரி,காரைக்கால்,வடஉள்தமிழகம்,டெல்டாமாவட்டங்கள்,தென்தமிழகம்,உள்தமிழகம்,
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்,
இலங்கையில் இன்று மற்றும் நாளை ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது மேற்கொண்டு வருகின்ற 25 ,26..தேதிகளில் தொடங்கி இம்மாத இறுதி வரை பரவலான மழை வாய்ப்பு இருக்கிறது மேற்கொண்டு அடுத்த அடுத்த நிகழ்வுகள் காரணமாக ஜனவரி முதல்வாரத்திலும் மழைக்கான வாய்ப்பிருக்கிறது ...
English Summary
Northeast monsoon likely to continue till January Rainfall recorded 34% more than normal