புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒலிபெருக்கி, பட்டாசு வெடிக்க தடை..எங்கு தெரியுமா?
Loudspeakers firecrackers banned on New Years Eve Do you know where
பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒலிபெருக்கி, பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாலை 1 மணிக்கு பிறகு மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகளை மூட வேண்டும் என்றும் போலீசார் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.
முதல் நாடாக நியூசிலாந்து 2025ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட தயாராக இருக்கிறது. இதனையடுத்து ஒவ்வொரு நாடாக புத்தாண்டை கொண்டாடி மகிழ்வர்.
2024ஆம் ஆண்டு நிறைவடைந்து 2025ஆம் ஆண்டு பிறக்க உள்ளதையடுத்து உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் புத்தாண்டை வரவேற்க ஆயத்தமாகி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 8 நாட்கள் உள்ள நிலையில் புத்தாண்டை வரவேற்பதற்காக பல்வேறு நகரங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் ஆண்டுதோறும் ஜனவரி 1-ந்தேதி எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, இந்திராநகர் ஆகிய இடங்களில் புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டை வரவேற்க பெங்களூரு மக்கள் ஆர்வமாக உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பெங்களூரு மாநகராட்சி, போலீசார் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் முக்கிய இடங்களான எம்.ஜி.ரோடு மற்றும் பிரிகேட் ரோட்டில் கண்காணிப்பு கேமராக்களை அதிகரிக்க மாநகராட்சிக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி புத்தாண்டு கொண்டாட்டத்தை அதிகாலை 1 மணிக்குள் முடித்துவிட வேண்டும்என்றும் .எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, இந்திரா நகர் ஆகிய இடங்களில் மட்டும்புத்தாண்டுகொண்டாட்டத்துக்குஅனுமதிவழங்கப்படும்என்றும்.முக்கியமான மேம்பாலங்கள் இரவு 10 மணிக்கு மேல் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோட்டில் 800 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்என்றும் .எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோட்டில் இரவு 8 மணிக்கு மேல் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும்என்றும்.புத்தாண்டு கொண்டாட வாகனங்களில் வருபவர்களுக்கு தனி வாகன நிறுத்தம்அமைத்து தரப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும்பெண்களின்பாதுகாப்புக்காகபெண்போலீசார்நியமனம்செய்யப்படுவார்கள் என்றும் .அதிகாலை 1 மணிக்கு பிறகு மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகளை மூட வேண்டும்.
பெங்களூருவில் மற்ற பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி கட்டாயம்.புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒலிபெருக்கி, பட்டாசு வெடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது என பெங்களூரு மாநகராட்சி, போலீசார் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளனர்..
English Summary
Loudspeakers firecrackers banned on New Years Eve Do you know where