பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கருப்பி நாய் உயிரிழப்பு - நடிகர் கதிர் இரங்கல்..! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கிய முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். இந்தப் படத்தின் கதைக்களம் 'கருப்பி' என்ற நாயைச் சுற்றிலும் அமைந்துள்ளது. இந்தப் படத்தின் பெரும்பாலான மாரிசெல்வராஜ் தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே புளியங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலேயே பெரும்பாலான காட்சிகளை படமாக்கியிருந்தார்.

'கருப்பி' நாயை வளர்த்து வந்த புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த விஜயமுத்துவும் அந்த படத்தில் துணை நடிகராக நடித்து இருந்தார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையன்று புளியங்குளம் பகுதியில் பட்டாசு வெடித்ததால், 'கருப்பி' நாய் ஊரில் இருந்து நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோடு பகுதிக்கு ஓடிச் சென்றது.

அப்போது, அந்த வழியாக சென்ற வாகனம் மோதியதில் நாய் அடிபட்டு படுகாயமடைந்தது. இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் நாயை மீட்டு விஜயமுத்துவின் வீட்டுக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிதுநேரத்தில் நாய் இறந்தது. இதனால், விஜயமுத்து நாயக் கட்டிபிடித்தபடி கதறி அழுதார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் 'கருப்பி' நாய்க்கு மாலை அணிவித்து புதைத்தனர். 'கருப்பி' நாய் உயிரிழந்ததற்கு நடிகர் கதிர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- "கருப்பி நீ இல்லாத காட்டில் நான் எப்படி தான் திரிவேனோ... உனக்கு அமைதி கிடைத்துவிட்டது என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor kathir condoles pariyerum perumal movie karuppi dog passed away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->