நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கிறார் நடிகர் கவின்.!! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பான மெகா சீரியல் மூலம் துணை நடிகராக அறிமுகமான கவின் பின்னர் திரைப்படங்களில் உதவி இயக்குநரானாராகவும் பணியாற்றியுள்ளார். விஜய் டிவியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நாயகனாக அறிமுகமாகி  சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கவின் கதாநாயகனாக நடித்து ஓடிடி.,யில் வெளியான லிஃப்ட் படம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து வெளியான டாடா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

தனது தனித்துவமான நடிப்பால் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள கவினுக்கு தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகிஸ்தர்கள் வட்டாரத்திலும் மதிப்பு உயர்ந்தது. தற்போது நடிகர் கவின் நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில்  காதலை மையமாகக் கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த நிலையில் நடிகர் கவின் தனது நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை இரு வீட்டார் சம்மதத்துடன் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளார். இந்த செய்தி கவின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor kavin getting marriage on 20th August


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->