ரஜினியை சந்தித்த நடிகை குஷ்பு.!   - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான குஷ்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. 

ரஜினி நடிப்பில் வெளியான 'தர்மத்தின் தலைவன்' படத்தின் மூலம் திரைத்துறையில் தடம் பதித்த குஷ்பு அதன் பின்பு அவருடன் மன்னன், அண்ணாமலை, பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன்னுடைய திரைப்பயணத்தின் தொடக்கத்திலிருந்து ரஜினியுடன் நல்ல நட்பு புரிந்து வருகிறார் நடிகை குஷ்பு. 

இதையடுத்து அரசியலில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மோகன் கதாநாயகனாக நடிக்கும் 'ஹரா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை குஷ்பு ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட குஷ்பு, "சூப்பர் ஸ்டாருடன் ஒரு சாதாரணமான சந்திப்பு. அவருடன் தேநீர் அருந்தியது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. உங்கள் பொன்னான நேரத்திற்கு நன்றி சார்." என்றுக் குறிப்பிட்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor kushpu meet rajinikanth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->